தொழில் நுட்ப நிறுவனங்கள் ட்ரம்புக்கு எதிராக போர்க்கொடி!

டொனால்ட் ட்ரம்பின் அதிரடிச் சட்ட நடவடிக்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை உலகின் முன்னணித் தொழில் நுட்ப நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளன.

அமேசன். மைக்ரோசொவ்ற் மற்றும் எக்ஸ்பீடியா ஆகியவை டொனால்ட் ட்ரம்பின் குடிவரவுத் தடை உத்தரவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

வொஷிங்டனின் சட்ட மா அதிபர் பொப் பெர்குஷன் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக வழக்கொன்றை பதிவு செய்திருக்கிறார். சமஷ்டி நீதிமன்றில் பதிவாகியிருக்கும் இவ் வழக்கு டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருக்கும் ஏழு இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரான தற்காலிகக் குடிவரவுத் தடையானது யாப்புக்கு முரணானது எனக் கூறியிருக்கிறது.

அமேசனின் ஸ்தாபகத் தலைவரான ஜெவ் பெஷோஸ் தமது நிறுவனம் டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு அதரவு தரத் தயாராவதாக தெரிவித்துள்ளார்.

தேவைப்படின் இவ்விடயம் குறித்து பரீட்சிக்கத் தாமும் தயார் என மைக்ரோசொவ்ற் செய்தி வெளியிட்டுள்ளது.
சிலிக்கன் வலியில் டொனால்ட் டர்ம்புக்கு எதிராக எழுந்திருக்கும் இன் நிலைப்பாட்டில் மேலும் பல தொழில் நுட்ப நிறுவனகளும் இணைந்துள்ளன.

அப்பிள் மற்றும் ட்விட்டர் ஆகியன ட்ரம்பை விமர்சித்துள்ளன. நெட்விலிக்சின் நிறைவேற்று உயரதிகாரி இது அமெரிக்கத்தனமான ஒரு முடிவல்ல என்று தெரிவித்துள்ளார்.