நாட்டில் புதிதாக நீதிமன்றங்களை நிர்மாணிப்பதற்கும், பழைய நிதிமன்றங்களை புனரமைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி கம்பளை, ருவன்வெல்ல, மாங்குளம், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களில் காணப்படுகின்ற நீதிமன்ற கட்டடங்களை புனரமைப்பதற்கும் புதிய நீதிமன்ற கட்டடங்களை நிர்மாணிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபஷவினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைகளுக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டில் தற்போதுள்ள நீதிமன்ற கட்டடங்கள் மிகப் பழமையானவையாக இருப்பதாலும், சனத்தொகையின் அதிகரிப்புக்கு ஏற்ப வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.
அத்துடன் நீதிமன்ற கட்டடங்களின் இடவசதிகளும் போதுமானதாக இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களினால் புதிய நீதிமன்ற கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான தேவை எழுந்துள்ளதால் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பல பகுதிகளிலும் புதிதாக நீதிமன்றங்கள் உருவாக்கப்படுவதால் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கம் வழக்குகளுக்கு தீர்வுகள் கிடைக்கப்பெறுமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளதுடன், மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.