நாட்டில் இவ் வருடம் முதல் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீற்றர்களை அறிமுகம் செய்ய இருப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மின்சக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே மின்சக்தி எரிசக்தி பிரதி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதற்காக தொழிற்சாலை ஒன்று ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் இதனை ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டது என கூட்டு எதிரணியினர் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக மின்சக்தி எரிசக்தி பிரதி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த தொழிற்சாலை 2007 இல் ஆரம்பிக்கப்பட்டதாகவும், இங்கு முன்பு பாவிக்கப்பட்ட மின்மணியே உற்பத்தி செய்யப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது ஸ்மார்ட் மின்மினியை உற்பத்தி செய்யும் நோக்கில் இந்த புதிய தொழிற்சாலைக்கு அமைச்சு கடந்த வருடம் ஜனவரியில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
குறித்த தொழிற்சாலையில் இருந்து 10 இலட்சத்திற்கு மேலாக மின்மினிகளை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
, எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய சீன நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.