நாட்டின் அரசாங்கம் ஜனநாயகத் தன்மை கொண்டதாக செயற்பட வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நொச்சியாகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த வருடத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் இடம்பெறாது என அரசாங்கம் கூறுகிறது.தேர்தல் நடத்தப்படாமையானது ஜனநாயகத்திற்கு முரணானது.
அரசாங்கம் தேர்தல்களுக்கு முகங்கொடுக்க அஞ்சக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.