ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவோம் என நினைக்கும் முன்னாள் ஆட்சியாளர்களின் ஊழலை நாளையாகும் போது ஒவ்வொன்றாக வெளியிடுவேன் என ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனா தெரிவித்தார்.
மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி!
யாராலும் ஆட்சியைக் கவிழ்க்க முடியாதுää ஆட்சியிலுள்ள அரசாங்கத்தினால் மாத்திரம் அதுமுடியும்ää அதுவும் ஐந்து வருடங்களுக்கு பின் தேர்தல் மூலமாகத்தான் முடியும். ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முகவும் விருப்பமாக இருக்கின்றார்கள்.
கடந்த ஆட்சியிலுள்ளவர்களிடத்தில் இருந்த வரப்பிரசாதங்கள் இல்லாமல் போனதற்கு ஏங்குகின்றார்கள். கடந்த ஆட்சியிலுள்ளவர்கள் விமானங்களை எடுத்துக் கொண்டு வெளி நாடுகளுக்கு எடுத்துச் சென்று திரும்பும் போது எவ்வளவு கோடிக் கணக்கான செலவுகளை விமான நிலையங்களுக்கு ஏற்படுத்தினார்கள் என்பது எனக்கு தெரியும்.
கடந்த ஆட்சியாளர்கள் கெலிகொப்டரை வீட்டிலுள்ள மோட்டார் சைக்கிள் மாதிரி பயன்படுத்தினார்கள். அரசாங்கத்தை கைப்பற்றுவோம் என கடந்த ஆட்சியாளர்கள் கூறினால் ஜனாதிபதி என்ற அடிப்படையில் அவர்கள் செய்த ஊழல்கள் பல இருக்கின்றன.
கடந்த ஆட்சியாளர்களின் ஊழல் மோசடிகளை சிறிது சிறிதாகவே மக்களுக்கு தெரியப்படுத்துவேன். முழு விடயங்களையும் ஒரே தடவை கூற முடியாது நாளையாகும் போது ஒவ்வொன்றாக வெளியிடுவேன் என தெரிவித்தார்.