இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த கடைசி 20 ஓவர் போட்டியில் யுஸ்வேந்திர சஹாலின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. 25 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றி சஹால் சாதனை படைத்தார். இதற்கு முன்பு இந்திய வீரர்களில் அஸ்வின் 8 ரன் கொடுத்து 4 விக்கெட் எடுத்ததே சிறந்த நிலையாக இருந்தது. சர்வதேச அளவில் 3-வது சிறந்த நிலையாகும்.
இலங்கை வீரர் அஜந்தா மெண்டீஸ் 2012-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக 8 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியதே 20 ஓவர் போட்டியில் சிறந்த பந்துவீச்சு ஆகும்.
2011-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 16 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றி அவரே 2-வது நிலையில் உள்ளார்.
26 வயதான அரியானாவை சேர்ந்த சஹால் இங்கிலாந்து அணியில் உள்ள பில்லிங்ஸ், கேப்டன் மார்கன், ஜோரூட், மொயின் அலி, பென்ஸ்டோக், ஜோர்டான் ஆகியோரை அவுட் செய்தார்.
தான் வீசிய முதல் ஓவரில் ஒரு விக்கெட்டை (ஆட்டத்தின் 2-வது ஓவர்) எடுத்தார். 2-வது ஓவரில் விக்கெட் எதையும் (ஆட்டத்தின் 4-வது ஓவர்) கைப்பற்றவில்லை. தனது 3-வது ஓவரில் 2 விக்கெட்டையும் (போட்டியின் 14-வது ஓவர்), 4-வது ஓவரில் 3 விக்கெட்டையும் (16-வது ஓவர்) கைப்பற்றினார்.
சஹால் ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடுகிறார். நேற்று அவர் சாதனை நீடித்தது பெங்களூர் மைதானத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல். அனுபவம் அவருக்கு கை கொடுத்தது. பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலிதான் இந்திய அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். இதனால் சஹால் மீது அவர் மிகுந்த நம்பிக்கை வைத்து வாய்ப்புகளை கொடுத்தார். அவரும் கேப்டனின் நம்பிக்கைக்கு ஏற்ப சிறப்பாக பந்து வீசி சாதனை புரிந்தார்.
சஹால் இந்த 20 ஓவர் தொடரில் 3 ஆட்டத்தில் 8 விக்கெட் எடுத்து முதலிடத்தை பிடித்தார்.
20 ஓவர் சர்வதேச போட்டியில் ‘டாப் 5’ சிறந்த பந்து வீச்சு வருமாறு:-