2006-ம் ஆண்டு முதல் சர்வதேச 20 ஓவர் போட்டியில் விளையாடி வரும் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனியால் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியவில்லையே என்று அடிக்கடி விமர்சனங்கள் எழுவது உண்டு.
கேப்டன்ஷிப்பில் பல சாதனைகளை படைத்த அவருக்கு ஏனோ அரைசதம் மட்டும் எட்டாக்கனியாக இருந்து வந்தது. 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 48 ரன்கள் எடுத்ததே நீண்ட காலமாக அவரது அதிகபட்சமாக நீடித்தது. இந்த நிலையில் சமீபத்தில் கேப்டன் பதவியை துறந்தார்.
இப்போது அவரது அரைசத கனவும் நனவாகியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 4-வது வரிசையில் இறங்கி அட்டகாசப்படுத்திய டோனி 50 ரன்களை முதல்முறையாக கடந்தார். 35 வயதான டோனிக்கு இது 76-வது 20 ஓவர் சர்வதேச போட்டியாகும்.