திராட்சையில் கருப்பு மற்றும் பச்சை திராட்சை என இரண்டு ரகங்கள் உள்ளது. கருப்பு ரகத்தில் பன்னீர் திராட்சை என்று ஒன்று உள்ளது. குறைந்த புளிப்புத்தன்மையுடன் சாப்பிடுவதற்கு ருசியாக இருப்பதுடன் அதிக மருத்துவ குணமும் இவ்வகை பன்னீர் திராட்சையில் உண்டு.
அரைக்கிலோ அளவு கொண்ட திராட்சை பழத்தை சாப்பிடுவது என்பது ஒரு நேர உணவு உட்கொள்ளுவது என்பதற்கு சமம். ஒரு மனிதன் அப்படி அரைக்கிலோ பழத்தினை அப்படியே சாப்பிடுவது என்பது சிரமமான ஒரு காரியமாக இருக்கும். ஆகவே நாம் இதை சாறு எடுத்து சாப்பிட்டால் மிகுந்த பலனும் கிடைக்கும்,
அப்படி சாறு எடுக்கும் போது கண்டிப்பாக மிக்சியில் அரைத்து சாறு எடுக்கக்கூடாது. ஏனெனில், பழத்தில் உள்ள விதைகளும், தோல்களும் சேர்ந்து அரைந்து அதனுடைய உண்மையான ருசி கெட்டு ஒருவித துவர்ப்புத்தன்மை கொடுத்துவிடும். ஆதலால் கைகைகளால் திராட்சையினை பிழிந்து சாறு எடுப்பது என்பதே சரியான முறை.
குளிர்ச்சிக்காக ஐஸ் கட்டிகளையோ, பிரிட்ஜ் தண்ணீரையோ சேர்க்கக்கூடாது. ஒரே நேரத்தில் குடிப்பது என்பது சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புள்ளது. அப்படிப்பட்டவர்கள் குறிப்பிட்ட நேர இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக பருகலாம்.
சமைத்த உணவை விட நூறு மடங்கு நன்மை தரக்கூடியது இந்த அரைக்கிலோ பழச்சாறு. இதை எந்த ஒரு உணவும் உட்கொள்ளாமல் ஒரு நேர உணவாக எடுத்துக்கொண்டால், கீழ்க்கண்ட பலன்களை பெறலாம்.
உடலில் உள்ள கெட்ட நீர், கபம், வாயு, சளி, குடல் கழிவுகள், உப்புகள் ஆகியவற்றைக் கரைத்து வெளியேற்றும்.
திராட்சையில் உள்ள குளுக்கோஸ் உயர்ந்த தரம் கொண்டது. இது சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளும்போது நல்ல சர்க்கரையாக மாறி உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.
ஆஸ்துமா நோயை குணப்படுத்துகிறது. இப்பழம் சேர்த்துக்கொள்ளாமல் ஆஸ்துமா நோயை குணப்படுத்துவது என்பது முடியாத காரியம்.
இருதயத்தை பாதுகாத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இருதய இரத்த குழாய் அடைப்பு நோயாளிகள் பை பாஸ் சர்ஜரி செய்து கொண்டவர்கள் கண்டிப்பாக இப்பழத்தினை சாப்பிட வேண்டும்.
கர்ப்பப்பை கோளாறு கொண்ட பெண்கள் இப்பழத்தினை எடுத்துக்கொண்டால் அது சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் நீங்கும்.
உடல் வளர்ச்சி குறைந்தவர்கள், உடல் பலகீனம் உள்ளவர்கள், தோல் வியாதி, மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகிய பிரச்சனை கொண்டவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வர விரைவில் நிவாரணம் அடையலாம்.
உலர்ந்த திராட்சையையும் நாம் பயன்படுத்தலாம். பல நூறு ஆண்டுகளாகவே இந்த உலர் திராட்சையானது உணவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளுபவர்கள் பயணத்தின் போது இந்த உலர் திராட்சை சாப்பிட்டால் சோர்வில்லாமல் பயணம் செய்யலாம். தேவையான சக்தியும் கிடைக்கும்.