நாய் கடித்தால் ஏன் துணியால் அந்த இடத்தை கட்டக்கூடாதென தெரியுமா?

உலக அளவில் வெறிநாய் கடியால் இறப்பவர்களில் இந்தியர்கள் தான் 80 சதவீதம் உள்ளனர் என சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. நாய் கடித்தால் உடனடியாக நாம் என்ன மாதிரியான முதலுதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

நாய் கடித்துவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் பதட்டத்தில் ஏதாவது செய்துவிடுகிறுாம். இதுபோன்ற மாற்று சிகிச்சைகளால் தான் அதிக அளவிலான விளைவுகள் உண்டாகின்றன.

நாய்க்கடிக்கு செய்ய வேண்டிய முதலுதவி

கடித்த இடத்தில் கிருமிகளின் எண்ணிக்கை பரவமால் இருக்க, கடிபட்ட இடத்தில் சோப்பு நீரால் பலமுறை நன்கு கழுவ வேண்டும்.

வேகமாக விழுகிற குழாய் நீரை திறந்துவிட்டு, 5 நிமிடங்கள் ரத்தம் நன்கு வெளியேறும் வரை வைத்து கழுவ வேண்டும். அடுத்து அந்த இடத்தில் டிஞ்சர் அயோடின் அல்லது டிஞ்சர் பென்சாயின் மருந்தை தடவ வேண்டும்.

அதன்பின் தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை பெறுவது அவசியம்.

செய்யக்கூடாதவை

நாய் கடித்தால் பெரும்பாலானோர் அந்த இடத்தில் துணியை வைத்து நன்கு இறுக்கமாகக் கட்டுவார்கள். அப்படி செய்யவே கூடாது.
சூரிய ஒளியில் இந்த வைரஸ் கிருமிகள் இறந்துவிடும் என்பதால் காயத்தை மூடாமல் வைத்திருப்பது நல்லது.
நாய் கடித்த இடத்தில் சுண்ணாம்பு, சந்தனம், சாம்பல், பச்சிலைச் சாறு போன்றவற்றைத் தடவக்கூடாது.