கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள கொப்பாள், தேவராஜ் அர்த் காலனியை சேர்ந்தவர் சகாபுதீன். இவரது மகன் அன்வர் அலி (வயது 18).
இவர் அந்த பகுதியில் உள்ள டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலையில் வழக்கம் போல் சைக்கிளில் அன்வர் அலி சென்றார்.
அப்போது, அசோகா சர்கிள் என்ற இடத்தில் சென்றபோது அந்த பகுதி வழியாக ஒசபேட் பகுதியில் இருந்து ஊபள்ளியை நோக்கி சென்ற கர்நாடக அரசு பஸ் அன்வர் அலியின் சைக்கிள் மீது மோதியது. இதில் அன்வர் அலி அரசு பஸ்சில் சிக்கிக்கொண்டார். அவரை, சில அடி தூரம் வரை பஸ் தரதரவென இழுத்து சென்றதால் அன்வர் அலியின் வயிற்று பகுதி நசுங்கியது.
இந்த விபத்து நடந்ததும் அங்கு பெங்களூரை சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர்.
ரத்தம் சிந்திய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அன்வர் அலி என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள், என்னை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லுங்கள் என்று அங்கிருந்தவர்களிடம் கூறி கதறி அழுதார்.
எனக்கு தாகமாக இருக்கிறது, தண்ணீர் கொடுங்கள் என்றும் கூறி கதறி அழுதார்.
ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறும், குடிக்க தண்ணீர் கேட்டும் கதறி அழுததை அங்கிருந்த வர்கள், காப்பாற்ற எந்தவித முயற்சியும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அன்வர் அலி உயிருக்கு போராடுவதை, அங்கிருந்தவர்கள் பொருட் படுத்தாமல் அதனை தங்களது செல்போனில் வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்தனர்.
பின்னர் இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து, அன்வர் அலியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் அன்வர் அலி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், மருத்துவ மனையில் அவருக்கு 7 பாட்டில் ரத்தம் செலுத்தி னோம்.
அவருக்கு நிறைய ரத்தம் சிந்தி இருந்தது. இருப்பினும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தோம்.
ஆனாலும் அவர் மதியம் சுமார் 2 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார்.
விபத்து நடந்து நீண்ட நேரம் கழித்து தான் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.
35 நிமிடம் தாமதாமாக மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார். 35 நிமிடத்திற்கு முன்னதாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அன்வர் அலியை காப்பாற்றி இருப்போம் என்றனர்.
பலியான அன்வர் அலியின் தந்தை தற்போது உயிருடன் இல்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மூத்த மகன் அன்வர் அலி தான் தனது தாய், 2 தம்பிகள் மற்றும் தங்கையை டைல்ஸ் கடையில் வேலை செய்து காப்பாற்றி வந்தான்.
இந்த நிலையில் அன்வர் அலி இறந்த சம்பவம் அவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் கல்லையா சேகர் என்பவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
உயிருக்கு போராடிய வாலிபரை காப்பற்றாமல் பொதுமக்கள் வீடியோ எடுத்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது. * * * உயிருக்கு போராடிய வாலிபர்.