விக்னேஸ்வரனை அடித்து விரட்ட வேண்டுமாம்!

வட மாகாண சபை முதலமைச்சரை அடித்து விரட்ட வேண்டுமெனவும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அவர் தமிழ் சிங்கள மக்களுக்கு இடையேயான நல்லுறவுகளை கெடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருதாகவும் இதனால் அவரைஅடித்து விரட்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று கொழும்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரன் ஒவ்வொரு தடவையும் இனவாத கருத்துக்களை வெளிட்டு தெற்கில் சிங்கள இனவாதிகளுக்கு தீனிபோட்டு இனங்களுக்கு இடையே உள்ள உறவுகளை கெடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார். இவரை அடித்து விரட்ட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.