தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பியகமவில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்

‘இந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிரணியினர் செய்யும் பரப்புரைகள் அடிப்படையற்றவை.

அவ்வாறான பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்திருந்தால், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைப் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் கண்டுபிடிக்கப்பட்டிருக்காது.

மஹிந்த ராஜபக்ச நாட்டில் இன வெறுப்பை பரப்ப முனைகிறார்.

நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். ஆனால், நாட்டின் ஒற்றையாட்சித் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்.

புதிய அரசியலமைப்பு பௌத்த மதத்துக்கு அச்சுறுத்தலானது என்று கூட்டு எதிரணியினர் மக்களை தவறாக வழிநடத்த முனைகின்றனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.