69 வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைத்து இலங்கையர்களும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு கோரப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீடுகள் , விற்பனை நிலையங்கள் , அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் போன்று வாகனங்களிலும் ஒரு வார காலத்திற்கு தேசிய கொடியினை பறக்கவிடுமாறு அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய ஒற்றுமையை கருப்பொருளாக கொண்டு இம்முறை சுதந்திர தின கொண்டாட்டம் காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது.