சீன பல்கலைகழக அரசியல் கற்கைநெறி சிறப்பு பட்டத்துடன், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவின், அரசியல் பிரவேசம் இருக்குமென்றால் அவரது வெற்றி நிச்சயமாகிவிடும்.
இருப்பினும் அவரது அரசியல் பிரவேசத்தை அவரது சகோதரர் விரும்பவில்லையென முன்னாள் வெளியுறவு தூதுவராக இருந்த கலாநிதி தயான் ஜெயதிலக கருத்து பகிர்ந்துள்ளார்.
மேலும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ சீன பல்கலைக்கழகம் ஒன்றில் அரசியல் கற்கைநெறி ஒன்றை மேற்கொள்ளவிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய, அரசியல் தேர்ச்சிக்கான பயிற்சி இல்லை என்றாலும் வெற்றி வாகை சூடுவார்.
அவரது ஆட்சிக்காலம், இலங்கையை வளர்ச்சி மிகு பாதைக்கு இட்டு செல்லும் என்பதில் தமக்கு நம்பிக்கை உள்ளதாகவும், 2019 ஆம் ஆண்டு பாதுகாப்பு தரப்பு கோத்தாவின் பக்கம் இருப்பர் எனும் வகையில் தனது எதிர்வு கூறலை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் கோத்தபாய அடுத்த ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து அரசியல் பிரவேசத்திற்கான பணிகளை செய்த போது அவரது சகோதரரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதோடு, மீறி அரசியலில் பிரவேசித்தால் சிறைக்கு செல்ல வேண்டி ஏற்படும். என எச்சரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.