மகிந்தவிற்கு மனநோய்? உறுதிப்படுத்தியுள்ள வைத்தியர்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி,  மஹிந்த இன்னமும் ஜனாதிபதி என்ற உணர்வு தோன்றும் வகையில் செயற்படுவதற்கு அவசியமான ஆதரவு வழங்குமாறு இந்த வைத்திய துறைக்கு தொடர்புடைய பேராசிரியர் ஒருவர், நல்லாட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடுமையான மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் இதன்போது  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சிங்கப்பூர் வைத்திய குழுவின் கண்கானிப்பின் கீழ் முன்னாள் ஜனாதிபதிக்கு அவசியமான சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றன. அந்த நடவடிக்கைகள் தடைப்பட்டால் அவரது நிலைமை மேலும் ஆபத்தான நிலைக்கு செல்லும் என பேராசிரியர், அரசாங்கத்தின் பிரதானிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இடைக்கிடையே மஹிந்த ராஜபக்ச இன்னமும் நாட்டின் ஜனாதிபதி என கூறுவது அவருக்கு மனரீதியில் சிறப்பான நிலைமையை ஏற்படுத்தனால் அவ்வாறு கூறப்படுவதனை கண்டுக் கொள்ளாமல் விடுமாறு அவர் கேட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.