இலங்கை வாழ் மக்களுக்கு ஓர் நற்செய்தி!

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் மத்திய வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டு உரிமையினை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்ட யோசனை ஒன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை உரிய காலத்திற்குள் செய்து முடிப்பதை உறுதி செய்வதற்காக, குறித்த வேலைத்திட்டத்துக்கு தேசிய முன்னுரிமையினை பெற்றுக் கொடுத்து துரிதமாக செயற்படுத்துவதற்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில், திறைசேரியின் கீழ் விசேட செயலணி ஒன்றை ஸ்தாபிக்க உள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டமானது 2019-ம் ஆண்டில் 620,000 வீடுகளை நிர்மானிப்பதற்கு எதிர்பாத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.