அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்றைய தினம் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் மாணவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 4 மணித்தியலங்களுக்கு அரை நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.