அலுவலக உதவியாளராக மாறிய ஜனாதிபதி!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கீழ் பிரதமர் பதவி என்பது அலுவலக உதவியாளர் பதவியை போன்றது என முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கூறியிருந்தாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அலுவலக உதவியாளர் போல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எப்பாவள பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் மக்களிடம் பணப் புழக்கம் இருக்கும் என்ற நிலைமையை தற்போதைய அரசாங்கம் முற்றாக இல்லாமல் செய்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்திடம் மக்களின் பணம் புழக்கத்தில் இருப்பதாகவும் லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.