இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சுரேஷ் ரெய்னா விளாசிய சிக்சர் ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த 6 வயது சிறுவனை பதம் பார்த்தது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சுரேஷ் ரெய்னா வானவேடிக்கை காட்டினார். அவர் 45 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சர் உட்பட 63 ஓட்டங்கள் குவித்தார்.
இதில் ஒரு சிக்சர் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த சதீஷ் என்ற 6 வயது சிறுவனின் இடது தொடை மீது விழுந்தது.
இதனால் வலியால் துடித்த அந்த சிறுவனுக்கு ஸ்டேடியத்திலுள்ள மருத்துவ குழு சிகிச்சை அளித்தது. இதன் பின்னர் சிறுவன் தொடர்ந்து ஆட்டத்தை ரசித்தார்.