இதுகுறித்து நடிகை காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு,
நடிகைகளுக்கு 30 வயது ஆகிவிட்டால், உங்கள் திருமணம் எப்போது என்று கேட்டு போகிற இடமெல்லாம் நச்சரிக்க தொடங்கி விடுகிறார்கள். திருமணம் செய்து கொள்ளும் நடிகைகளுக்கு அதோடு சினிமாவும் முடிந்து விடுகிறது என்றும் பேசுகிறார்கள். இதனால்தான் சினிமாவையும் நடிப்பையும் நேசிக்கும் கதாநாயகிகள் திருமணம் என்ற பேச்சை எடுப்பதற்கே பயப்படுகிறார்கள்.
என்னிடமும் நிறைய பேர் திருமணத்துக்கு தயாராகி விட்டீர்களா? மாப்பிள்ளை முடிவாகி விட்டதா என்று விசாரித்தபடி இருக்கிறார்கள். திருமணத்துக்கும் நடிப்புக்கும் முடிச்சு போட்டு பேசுவது எனக்கு சுத்தமாக பிடிக்காது. 25 வயது ஆனதும் திருமணம் செய்து கொண்டு வேலைக்கு செல்லும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் திருமணம் சாதாரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் நடிகைகளுக்கு மட்டும் என்ன குறைச்சல்? திருமணம் ஆன நடிகைகள் மார்க்கெட் இல்லாமல் போய் விடுவார்கள் என்று வேறு விதமாக பேசுவது ஏன்?
நடிகைகளுக்கும் மற்ற பெண்களைப்போல் நடிப்பு ஒரு தொழில்தான். வேலைக்கு செல்வது மாதிரிதான் படப்பிடிப்புகளுக்கு வருகிறார்கள். திருமணம் ஆன பெண்கள் வேலைக்கு செல்லும்போது நடிகைகளும் திருமணம் செய்து கொண்டு நடிக்க வருவதில் என்ன தவறு இருக்கிறது. திருமணம் ஆன நடிகைகள் மார்க்கெட் இழந்து விடுவார்கள் என்று பேசுவதையும் அவர்களுக்கு நடிக்க வாய்ப்பு தராமல் ஒதுக்குவதையும் பார்க்கும் போது எனக்கு கோபமாக வருகிறது.
25 வயது ஆனதும் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் தொடர்ந்து நடிக்கும் நடிகைகளும் தற்போது இருக்கத்தான் செய்கிறார்கள். குழந்தை பெற்ற நடிகைகளும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது ஒரு நல்ல மாற்றம். எனது திருமணத்துக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. கதாநாயகியாக நான் ரொம்ப தூரம் போக வேண்டி இருக்கிறது. அதோடு மனதுக்கு பிடித்த பையனும் கிடைக்க வேண்டும்.”
இவ்வாறு காஜல் அகவர்வால் கூறினார்.