சிரஞ்சீவி – பவண் கல்யாண் இணைந்து நடிக்கும் புதிய படம்!

`கைதி நம்பர் 150′ படத்தின் மூலம் தெலுங்கு படத் திரையுலகில் ரீ என்ட்ரீ ஆகியிருக்கும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அடுத்ததாக  த்ரிவிக்ரம் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். எம்பி டி சுப்பராமி ரெட்டி தயாரிக்க உள்ள இப்படத்தில் சிரஞ்சீவியுடன்  இணைந்து அவரது தம்பியான பவர் ஸ்டார் பவன் கல்யாணும் நடிக்க உள்ளார்.

இதுகுறித்து சுப்பராம ரெட்டி தெரிவித்ததாவது, சிரஞ்சீவியின் ரீஎன்ட்ரி படமான `கைதி நம்பர் 150′ படத்தை பார்த்தேன். அதன் பிறகே  மீண்டும் படங்களை தயாரிக்கும் முடிவுக்கு வந்ததாக கூறினார். அதன்பின்னர் சிரஞ்சீவியை வைத்தே புதிய படம் தயாரிக்க முடிவு  செய்ததாகவும் அவர் கூறினார். சிரஞ்சீவியை வைத்து சிறந்த படத்தை த்ரிவிக்ரமால் மட்டுமே அளிக்க முடியும் என்பதால்  த்ரிவிக்ரமுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறிய அவர் பேச்சுவார்த்தையில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் சிரஞ்சீவி, பவண் கல்யாண்  நடிக்க உள்ளது உறுதியாகி உள்ளதாக கூறினார்.

இப்படத்தை சுப்பராம ரெட்டியுடன் இணைந்து சி அஸ்வின் தத்தும் தயாரிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். சிரஞ்சீவியும், பவண்  கல்யாணும் இணைவதால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.