விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்றிக்கு எவ்வாறு வருகின்றார் என்பது அரசாங்கத்திற்கு தெரியவில்லையா? அல்லது கண்டு கொள்ளாமல் இருக்கின்றார்களா? என வெலிக்கடை சிறைச்சாலைக்கு வருகைதந்த தேரர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்க வாகன துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை பார்க்க வந்த தேசிய சங்க சபையின் தலைவர் மாதுறுவோயே தம்மிஸ்ஸர் தேரரே இவ்வாறு தெரிவித்தார்.
விமலை சிறையில் அடைப்பதை விடுத்து பிரதமர் ரணிலையும், முன்னாள் மத்தியவங்கி ஆளுநரையும் பிடித்து சிறையில் போடுங்கள்.
அத்துடன் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்றத்திற்கு உலங்கு வானூர்தியில் வருகின்றார். அது தொடர்பில் ஏன் இந்த அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது என தெரியவில்லை.
நாட்டில் தற்போது புதிய அரசியல் யாப்பினால் பிரிவினைவாதம் தலைவிரித்து ஆடுகின்றது, மறுமுனையில் இந்தியாவிற்கு எட்கா உடன்படிக்கையின் மூலம் நாட்டின் வளங்களை விற்பனை செய்து வருகின்றார்கள்.
இதற்கு எதிராக குரல் கொடுத்தால் அவர்களை சிறையில் தள்ளுகின்றது அரசு, அத்ததுடன் அரச சொத்தை உதாசீனம் செய்தவர்களுக்கு இன்னமும் தண்டனை வழங்கமால் இருக்கின்றது.
அரசாங்கம் இவ்வாறு செயற்படுவதை விடுத்து பாரிய மோசடிகளில் ஈடுபட்ட முன்னாள் மத்தியவங்கி ஆளுநர் மற்றும் பிரதமரை கைது செய்து சிறையில் அடையுங்கள் என தெரிவித்தார்.