இங்கிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுசுவேந்திர சஹால் 6 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். இதுபற்றி யுசுவேந்திர சஹால் கூறுகையில், முதலில் புதிய பந்தில் நேராக வீசினேன். அதன்பின் அமித் மிஸ்ரா வெல்வேறு வேகத்தில் வீசியதையும், அதில் பந்து சுழன்றதையும் பார்த்தேன்.
இதனால் ஆடுகளத்தில் சுழற்பந்து எடுப்படும் என்பதை உணர்ந்தேன். இதையடுத்து அமித் மிஸ்ராவின் ஆலோசனையை பெற்று பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றினேன்.
இந்திய மண்ணில் இது தான் எனது முதல் தொடர். பெங்களூர் மைதானத்தில் நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். இங்கிலாந்துக்கு எதிராக 40 ரன் கொடுத்தாலும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி விடவேண்டும் என்று நினைத்து இருந்தேன் அது எனது திட்டமாக இருந்தது.