வீடு வீடாக செல்லப்போகும் மஹிந்த அணி!

இந்நாட்டு காணிகளை வௌிநாடுகளுக்கு விற்பனை செய்வது தொடர்பில் வீடு வீடாக சென்று மக்களுக்குவிழிப்புணர்வை ஏற்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக கூட்டு எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே இதனை தெரிவித்தார்.

காணிகளை விற்பனை செய்வதற்கு எதிராக 58 இலட்சம் கையொப்பங்களை கொண்ட மனுவொன்றை அரசாங்கத்திற்கு கையளிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.