இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக பிரிட்டிஷ் மகாராணி தெரிவித்துள்ளார்.
அடுத்து வருகின்ற ஆண்டுகள் இலங்கை மக்களுக்கு அதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சியைத் தருவதாக அமைய வேண்டும் என பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபத் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.