நாட்டின் தற்போதைய அரசியல் தலைவர்கள் இலங்கையை துண்டுகளாக பிரித்து தனியான பொலிஸ் சேவையுடன் மாநில அரசாங்கங்களை உருவாக்க தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவுத்திட்டங்கள் ஊடாக கொழும்பு கிராண்ட் ஒரியண்டல் ஹொட்டல் போன்ற சிறிய வர்த்தகங்கள் முதல் எமது அரசாங்கத்தின் பெரிய திட்டமான நுரைச்சோலை அனல்மின் நிலையம் வரை அரசுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் விற்பனை செய்யும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஹம்பாந்தோட்டை, திருகோணமலை துறைமுகங்கள் மாத்திரமல்ல அவற்றுக்கு அருகில் இருக்கும் நிலங்களையும் விற்பனை செய்ய உள்ளதாகவும் முன்னாள ஜனாதிபதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.