ஜனாதிபதி டிரம்பின் அடுத்த அதிரடி: பெண்களுக்கு இனிமுதல் ஆடை கட்டுப்பாடு!

அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் கடந்த 15 நாட்களாக தினமும் ஒரு சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டு உலக அரசியல் சமூக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்றும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் ஜனாதிபதி டிரம்ப். அதாவது வெள்ளை மாளிகையில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் ஆடை கட்டுபாடுகளை விதித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் பணிக்கு வரும் ஊழியர்கள் சிறப்பான ஆடை அணிந்து வரவும், தங்களது புறத் தோற்றத்தையும் பொலிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறாராம் ஜனாதிபதி டிரம்ப்.

அதாவது “பெண்கள் பெண்களைப் போலவும், ஆண்கள் ஆண்களைப் போலவும்” உடையணிந்து வர வேண்டும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆடை கட்டுப்பாடுகள் ஜனாதிபதி மாளிகையில் மட்டுமல்லாமல் ஜனாதிபதியின் பிரதிநியாக அதிகாரிகள் கலந்து கொள்ளப் போகும் அனைத்து இடங்களிலும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகரிகளும், ஊழியர்களும் சிக்கி திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

டிரம்ப் ஜீன்ஸு உடை அணிவதற்கு தடை போடவில்லை. ஆனால் பெண்கள் ஜீன்ஸ் அணிந்தாலும் அவர்களது தோற்றம் நேர்த்தியாகவும், கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என டிரம்பின் அதிகாரப் பூர்வ மையங்களில் இருந்து குறித்த தகவல் கசிந்துள்ளது.

ஆனால் ஜனாதிபதி டிரம்பின் இந்த புதிய உத்தரவு சமூகவலைதளங்களில் கடும் கண்டனத்தையும் கிண்டலையும் ஏற்படுத்தியுள்ளது.