இளவரசர் ஹர்யின் கைகோர்த்தபடி அவரது காதலியும் நடிகையுமான மேகன் லண்டன் வீதியில் வலம் வந்த சம்பவம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானிய இளவரசர் ஹரி அவரது காதலியும் நடிகையுமான மேகனுடன் இணைந்து கைகோர்த்தபடி லண்டனில் வலம் வந்துள்ளனர்.
இதை பார்த்த பொதுமக்கள் மேகன் அரச குடும்பத்தின் ஒரு அங்கத்தினராகவே படிப்படியாக மாறி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
முதன் முறையாக காதலியுடன் லண்டன் வீதிகளில் வலம் வந்த இளவரசர் ஹரி, உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் club Soho House என்ற உணவு விடுதியில் இரவு உணவை முடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இளவரசர் ஹரி தமது காதலி கைகோர்த்து நடந்து செல்வதை பலர் புகைப்படம் எடுத்துள்ளனர். ஆனால் இளவசர் ஹரி இவை எதையும் கண்டுகொள்ளாமல் மிகவும் பக்குவத்துடன் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்த பந்தத்தை அவர் எத்துணை முதிர்ச்சியுடன் மூனெடுத்து செல்கிறார் என்பதற்கு சிறந்த சான்று என பார்வையாளர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கனடிய நடிகையான மேகன் தமது அடுத்த கட்ட படப்பிடிப்பு மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்னர் கிட்டும் அனைத்து வாய்ப்புகளையும் இளவரசர் ஹரியுடன் செலவிடவே லண்டனில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
மேகனின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவங்க உள்ளது. மட்டுமின்றி இந்த ஆண்டு இறுதியில் இருந்து மேகன் நிரந்தரமாக லண்டனில் குடியேறும் வாய்ப்புகளும் உள்ளதாக கூறப்படுகிறது.