ரஷ்யா மீதான தடைகள் தளர்த்தப்படமாட்டாது என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
முன்னதாக, ரஷ்யப் பாதுகாப்பு அமைப்பான FSBயுடன் வர்த்தக உறவு வைத்துக்கொள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அமெரிக்க நிதியமைச்சு தெரிவித்திருந்தது. அதையடுத்து வெள்ளை மாளிகையின் அறிவிப்பு வெளியானது.
ரஷ்யா மீதான தடைகள் தளர்த்தப்படுமா என்று நிருபர் ஒருவர், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிடம் கேட்டபோது, அதற்கு அவர் ” நான் எதையும் தளர்த்தபோவதில்லை” என்று கூறினார்.
கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் FSB தலையிட்டதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் குற்றிஞ்சாட்டின. ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் திருமதி ஹிலரி கிளிண்ட்டனுக்கு எதிராகவும் குடியரசு கட்சியின் வேட்பாளர் திரு டிரம்ப்பு ஆதரவாகவும் அந்த அமைப்பு செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.