தென் ஆப்பிரிக்கா முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 121 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. தென் ஆப்பிரிக்கா ஏற்கனவே டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
தொடரை இழக்காமல் இருக்க இந்தப்போட்டியில் வெற்றி பெற இலங்கை அணி கடுமையாக போராடும். இந்த அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.