கமல் படத்தலைப்பை கைப்பற்றிய சிபிராஜ்

சிபி சத்யராஜ் நடிப்பில் `கட்டப்பாவ காணோம்’ படம் திரையில் ரிலீசாக தயாராகி உள்ள நிலையில், சிபிராஜின் அடுத்த படம்  குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

`சைத்தான்’ புகழ் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்க உள்ள இப்படத்தை சத்யராஜ் அவரது தயாரிப்பு நிறுவனமான  நாதாம்பாள் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து வருகிறார்.

கடந்த ஆண்டு தெலுங்கில் `ஷனம்’ என்ற பெயரில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற அப்படத்தின் ரீமேக்காக இப்படம்  தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில், உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் 1998-ஆம் ஆண்டு வெளியான `சத்யா’ படத்தின்  தலைப்பை சிபிராஜ் படக்குழுவினர் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் போஸ்டரையும் படக்குழு  வெளியிட்டது.

இறுதிகட்ட படப்படிப்பில் இருக்கும் `சத்யா’ படத்தில் சிபிராஜுடன் இணைந்து ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு,  சதீஷ், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளனர்.