நிலக்கடலையை வேகவைத்து சாப்பிடுவது நல்லதா? ஆபத்தா?

நட்ஸ் வகைகளின் ஒன்றான நிலக்கடலையில் பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற பருப்பை விட அதிக அளவில் சத்துக்கள் மிகுந்துக் காணப்படுகிறது.

எனவே இந்தக் கடலையை தினமும் வேகவைத்து, வறுத்து சாப்பிடுவதை தவிர்த்து, பச்சையாக நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால், அதனுடைய முழுமையான சத்துக்களை நாம் பெறலாம்.

நிலக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள்
  • நிலக்கடலை தினமும் சாப்பிட்டு வந்தால், நீரழிவு, இதயநோய், புற்றுநோய் மற்றும் அதிகப்படியான உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.
  • பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டால், அவர்களின் கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன், அதில் ஏற்படும் கர்ப்பப்பை கட்டிகள், நீர்க்கட்டிகள் போன்ற பிரச்சனை ஏற்படாது.
  • நிலக்கடலையில் உள்ள மாங்கனீஸ் அமிலம், நமது ரத்தத்தில் உள்ள மாவுச்சத்து மற்றும் கொழுப்புக்களை சீராக்குவதில், முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
  • கால்சியம் சத்துக்கள் நிலக்கடலையில் அதிகமாக உள்ளதால், இது நமது உடலுக்கு தேவையான கால்சியம் கிடைப்பதுடன், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புத்துளை நோய் வராமம் தடுக்கச் செய்கிறது.
  • நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்துக்கள், நமது இதய நரம்புகளை பாதுகாத்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை கட்டுப்படுத்துகிறது.
  • நிலக்கடலையில் உள்ள பாலிபனீல்ஸ் என்ற ஆன்டிஆக்சிடென்ட் அமிலமானது, நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நீண்ட நாட்கள் இளமையை பராமரித்து, மூளை வளர்ச்சி, ஞாபக சக்தி மற்றும் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.