ஆண் குழந்தைகளை பிரசவிக்கும் தாய்மார்களின் ஆயுள்காலம் குறையும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பின்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இது குறித்து ஒரு ஆய்வினை நடத்தினார்கள்.
இந்த ஆய்வில், ஆண் குழந்தைகளை பெற்றெடுக்கும் பெண்கள் சுமார் 7% பேர்கள் குறைந்த நாட்களிலேயே உயிரிழப்பதாக கூறுகின்றார்கள்.
மேலும் இதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டதில், தாய்மார்களின் உடல் ரீதியான பிரச்சனைகளும் இதில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் கர்ப்பிணி பெண்கள், பெண் குழந்தைகளை சுமப்பதை விட ஆண் குழந்தைகளை சுமப்பது கடினம் என்றும் ஆண் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க தாய்மார்களுக்கு கூடுதல் சக்தி தேவைபடும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
எனவே இது போன்ற சில விஷயங்கள் மூலம் ஆண் குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களின் ஆயுட்காலம் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்.
மேலும் இது குறித்து, பின்லாந்தில் உள்ள துர்கு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் சாமுளி ஹெல்லே என்பவர் இந்த ஆய்வு குறித்து, இன்னும் நிறைய சாட்சி கூறுகள் தேவைப்படுக்கின்றது என்று கூறியுள்ளார்.