பிரதியமைச்சரின் சபதத்தால் ஆவேசத்தில் மக்கள் : யார் தலையில் இடி??

இலங்கையின் சுற்றாடலை மாசுபடுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் தலையில் இடி விழ வேண்டும் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

நேற்றைய தினம் மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும் அங்கு தொடர்ந்த அவர்,

தெஹிகஹபல்லவ எனும் கிராமத்தில் 50 அடிக்கு மேலாக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

இதன் காரணமாக அன்று நான் பிரதேச செயலாளருக்கு கடுமையான எதிர்ப்பையும் தெரிவித்தேன். அதனை செய்திகளாக கண்ட அந்த பிரதேச செயலாளர் உடனடியாக மண் வெட்டுவதற்கான உரிமையை இரத்து செய்து விட்டாராம்.

உடனடியாக பொலிஸாரை அங்கிருந்து அகற்றி மண் வெட்டுவதையும். இது வரை பொறுமையாக இருந்து விட்டு இப்போது தூக்கத்தில் இருந்து விழித்து விட்டார்கள் போல.

ஆனால் நான் கேட்டபோது மண் வெட்டுவதற்கு தகுந்த அதிகாரங்கள் உள்ளது என்றே கூறினார்கள். ஆனால் இன்று மாறிவிட்டார்கள்.

அதேபோல நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறிவருகின்றார்கள். ஆனால் நான் மன்னிப்பு கேட்கப்போவதும் இல்லை பின்வாங்கப் போவதும் இல்லை இது உறுதி எனவும் ரஞ்சன் தெரிவித்தார்.

இதேவேளை அங்கு கூடியிருந்த பொதுமக்களும் சூழலை மாசு படுத்துகின்றவர்கள் தலையில் இடி விழ வேண்டும், எக்காரணம் கொண்டும் ரஞ்சன் மன்னிப்பு கேட்கக் கூடாது என ஆவேசமாக கூச்சம் இட்டமை குறிப்பிடத்தக்கது.