ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் இன்று நடைபெற்ற 69வது தேசிய சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் எதிர்கட்சி பிரதிநிதிகள் கலந்துக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் வினவிய போது சுதந்திரம் கொண்டாடும் அளவில் உண்மையான சுதந்திரம் நாட்டினுள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற தேசிய சுதந்திர தின விழாவில் எதிர்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் கலந்துக் கொள்ளவில்லை எனவும் இது வினோதமான விடயம் என திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.