தடைகளை தாண்டி தமிழ் மொழியில் தேசிய கீதம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இலங்கையின் 69 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் காலி முகத்திடலில் நடைபெற்றது.

இந்த நிகழ்விள் போது, தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது.

மிக நீண்ட தசாப்தங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை அடுத்து தென்னிலங்கை அரசியல் களத்தில் பெரும் குழப்பகரமான நிலை ஏற்பட்டது.

எனினும் பல தடைகளை தாண்டி தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.