அடுத்த சுதந்திர தினத்திற்கு நாடு மிஞ்சப்போவதில்லை!

கால­னித்­துவ ஆட்­சியில் இருந்து சுதந்­திரம் பெற்­றது, ஒற்­றை­யாட்­சியை சிதைத்து விட்டு பிள­வு­பட்ட இலங்­கைக்குள் பொலிஸ் அதி­கா­ரத்­து­ட­னான தனிப்பிராந்­திய ஆட்­சிகள் உரு­வாக்­கு­வ­தற்­கா­கவா என முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ, 70 ஆவது சுதந்­திர தினத்­திற்கு நாடு மிஞ்­சப்­போ­வ­தில்லை எனவும் அவர்  ஆரூடம் கூறியுள்ளார்.

69ஆவது சுதந்­திர தினம் தொடர்­பாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ வெளியிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

69 ஆவது சுதந்­திர தினத்தை இன்று நாங்கள் அனுஷ்­டிக்­கின்றோம். இந்த தினத்தில் எமக்கு கிடைக்­கப்­பெற்­றுள்ள சுதந்­திரம் மற்றும் சுயா­தீ­ன­தன்மை தொடர்பில் பெற்­றோர்கள், முதி­ய­வர்கள், ஆசி­ரி­யர்கள் மற்றும் மாண­வர்­க­ளுக்கு தெளிவு­ப­டுத்­து­கின்­றனர். ஆனால் தற்­போ­தைய அர­சியல் தலை­வர்­களின் செயற்­பா­டுகளைப் பார்க்கையில் 70 ஆவது சுதந்­திர தினத்தை அனுஷ்­டிப்­பதற்கு நாடு மிஞ்­சுமா எனத் தெரியவில்லை.

இலங்­கையை பிள­வு­ப­டுத்தி தனித்­து­வ­மான பொலிஸ் அதி­கா­ரங்­க­ளுடன் பிராந்­திய ஆட்சி நிர்­வா­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கு தற்­போ­தைய அர­சியல் தலை­மைத்­து­வங்கள் மிகவும் அவ­ச­ர­மாக செயற்­ப­டு­கின்­றனர். இதனைத் தவிர  2016 மற்றும் 2017 ஆம் ஆண்­டு­க­ளுக்­கான தேசிய வரவு – செலவுத் திட்­டத்தின் ஊடாக கொழும்பில் அமை­யப்­பெற்­றுள்ள கிறான் ஒரி­யன்டல் ஹோட்டல் போன்ற சிறிய அபி­வி­ருத்தி திட்­டங்­களில் இருந்து எமது ஆட்சிக் காலத்தின் பாரிய அபி­வி­ருத்தி திட்­ட­மான நுரைச்­சோலை அனல் மின் நிலையம் வரை அனைத்து தேசிய வளங்­க­ளையும் விற்­கின்­றனர்.

அம்பாந்தோட்டை மற்றும் திரு­கோ­ண­மலை துறை­மு­கங்­க­ளிலும் அதனை சூழவும் பாரிய நிலப்­ப­ரப்பு அந்­நிய நாடு­க­ளுக்கு வழங் ­கப்­பட்­டுள்­ளது. கால­னித்­துவ ஆட்­சியில் இருந்து நாடு சுதந்­திரம் பெற்ற போது இலங்­கைக்கு விட்டுச் சென்ற ஒற்­றை­யாட்­சியை சிதைத்து அதனை பிளவுப்படுத்தவும் தேசிய வளங்களை வெளிநாட்டவ ர்களுக்கும் விற்கவுமா இந்த சுதந்திரதினம் என தற்போதைய ஆட்சியாளர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியாகும்.