தனியார் பல்கலைக்கழகங்கள் கட்டாயம் தேவை!

இலங்கையில் உள்ள சர்வதேச பாடசாலைகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வியை வழங்க தனியார் பல்கலைக்கழகங்கள் அத்தியவசியமானது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சர்வதேச பாடசாலைகளில் சுமார் 4 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், தனியார் பல்கலைக்கழகங்களை எதிர்ப்பது பாசாங்குத்தனம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.