சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! ரத்தாகிறதா பொதுச்செயலாளர் பதவி?

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நடராஜன் நியமனம் செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக-வின் பொதுச்செயலாளராக சசிகலா நடராஜன் நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் கட்சி விதிகளின் படி சசிகலா தெரிவு செய்யப்படவில்லை என்றும், 1.5 கோடி உறுப்பினர்களின் வாக்கு எண்ணிக்கையின் மூலமே பொதுச்செயலாளர் தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் சசிகலா புஷ்பா எம்.பி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும்படி சசிகலா நடராஜனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், சசிகலா நடராஜன் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட தீர்மானத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சமர்ப்பிக்கவும் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.