மெரினாவில் 144 தடை: ஆணையர் ஜார்ஜ் அதிரடி அறிவிப்பு

சென்னை மெரினா கடற்கரையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது என சென்னை ஆணையர் ஜார்ஜ் அறிவித்துள்ளார்.

முன்னதாக, சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கொண்டு வர கோரி போராடியவர்களை பொலிசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இதை கண்டித்து சென்னை முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதுதொடர்பாக, பொலிசார் பலரை து செய்து வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், மெரினாவில் போராட்டகாரர்கள் மீண்டும் கூடுவதாக தகவல் பரவியது. இதனால், கடந்த 28ம் தேதி நள்ளிரவு முதல் வரும் 12ம் தேதி வரை மெரினாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது 144 தடை உத்தரவை திரும்பப்பெறுவதாக சென்னை ஆணையர் ஜார்ஜ் அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, நிலைமை கட்டுக்குள் இருப்பதால் 144 தடை உத்தரவு திரும்பப்பெறப்படுகிறது. சென்னை மாநகர காவல் சட்டப்பிரிவு 41-ன் கீழ் கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை போராட்டம் நடத்த தடை நீடிக்கிறது. மாநகர காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி என ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.