பிரித்தானியா நாட்டில் டொனால்டு டிரம்ப் போலவே உருவம் கொண்ட 700 ஆண்டுகள் பழமையான கல் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சமீரா அகமத் என்னும் பெண் பத்திரிக்கையாளர் கடந்த வருடம் பிரித்தானியா நாட்டில் உள்ள Nottinghamshire கவுண்டியில் அமைந்துள்ள Southwell Minster தேவாலயத்துக்கு சென்றுள்ளார்.
அங்கு நிறைய பழமை வாய்ந்த சிலைகள் இருந்துள்ளன. அதில் டொனால்டு டிரம்ப் போலவே உருவம் கொண்ட சிலையை பார்த்த அவர் புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
இது குறித்து சமீரா கூறுகையில், நான் சென்ற தேவாலயத்தில் 280க்கும் மேற்ப்பட்ட சிலைகள் இருந்தன.
அதில் 14ஆம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட ஒரு சிலை தலைமுடி, முகம் என அப்படியே அமெரிக்க ஜனாதிபதி டிரப்ம் போலவே இருந்தது.
ஆச்சரியமடைந்த நான் அதை புகைப்படம் எடுத்தேன் என அவர் கூறியுள்ளார்.
மேலும், ராஜ வம்ச மனிதர்கள் சிலை உள்ள வரிசையில் டிரம்ப் சிலை இல்லையென்றும், கீழ்தரப்பட்ட மனிதர்களின் சிலைகள் உள்ள பகுதியில் தான் அந்த சிலை நிறுவப்பட்டுள்ளதாக சமீரா கூறியுள்ளார்.
வேலைகாரர்கள் வரிசையில் தன் உருவம் போன்ற சிலை இருப்பது டிரம்ப்க்கு தெரிந்தால் என்ன நடக்குமோ!