அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் அந்நாட்டின் தேசிய சின்னமாக விளங்கும் சுதந்திர தேவியின் சிலையின் தலையை வெட்டி கொலை செய்ததைப் போல் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கை ஒன்று கார்ட்டூன் வெளியிட்டிருப்பது அமெரிக்க மக்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக பதவி வகித்த பின்பு டிரம்ப் பல சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்து வருகிறார். இதனால் உலகில் உள்ள சில நாடுகள் டிரம்ப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் அடையாளமாக விளங்கும் சுதந்திர தேவி சிலை, நியூயார்க் துறைமுகத்தில் உள்ளது. இது கடந்த 1886 ஆம் ஆண்டு அமெரிக்க சுதந்திரத்தை ஒட்டி, பிரான்ஸ் அரசு இதனை அன்பளிப்பாக அளித்தது.
தரையில் இருந்து மொத்தம் 93 மீற்றர் உயரம் கொண்ட இந்த சிலை, சர்வதேச நட்பியல், ஒற்றுமையின் அடையாள சின்னமாகக் கருதப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டிரம்ப், சர்வதேச அமைதியை சீர்குலைக்கும் வகையில், செயல்பட தொடங்கியுள்ளார்.