சீனாவுடன் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்பாடு தொடர்பாக பேச்சு நடத்துவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் மே மாதம், பீஜிங் செல்லவுள்ளார்.
இந்த தகவலை சீனாவுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு வெளியிட்டுள்ளார்.
இலங்கை சுதந்திர நாளை முன்னிட்டு பீஜிங்கில் நேற்று நடந்த நிகழ்வுகளின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீனாவின் “ஒரு அணை ஒரு பாதை” திட்டம் தொடர்பான உச்சி மாநாடு ஒன்று வரும் மே மாதம் சீனாவில் நடைபெறவுள்ளது.
20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ள இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது இருதரப்பு சுதந்திர வர்த்தக உடன்பாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும், பிரதமரின் இந்த பயணத்திட்டத்தை உறுதிப்படுத்தினார்.