டிசம்பர் 5 ஜெயலலிதா மறைவு… பிப்ரவரி 5 சசிகலா முதல்வராக தேர்வு.. 60வது நாளில் சாதித்த சசி!!

சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜெயலலிதா மறைந்த 60வது நாளில் சட்டச இவர் நாளை அல்லது 9ஆம் தேதி முதல்வராக பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற சசிகலா கட்சியை கைப்பற்றினார்.

தற்போது சட்டசபைக் குழு .தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் முதல்வராக பதவியேற்க உள்ள சசிகலா இதன்மூலம் ஆட்சியையும் கைப்பற்றியுள்ளார்.