முஸ்லிம் மக்களுக்கு வலைவீசும் மகிந்த!

குருநாகல் மல்லவப்பிட்டிய பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் முற்போக்கு முன்னணி நேற்றைய தினம் ஒரு சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

குறித்த சந்திப்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துக் கொண்டார். குறித்த சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தக கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த சந்திப்பில் ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ,சனத் நிசாந்த உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

இதேவேளை,கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தில் கலந்துக் கொள்ளுமாறு மஹிந்தவுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையிலும் அவர் கலந்துக் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.