அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்ட இனவாதப்பிரச்சினைக்கு பிரதான காரணமாக கூறப்பட்ட நபரே மட்டக்களப்பு சுமனரதன தேரர் ஆவார்.
இவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ஒன்றும் செய்யப்பட்டுள்ளது. அதே போல பகிரங்கமாக இனவாதத்தை பரப்பியவர் என கைது செய்யப்பட்டவரே டான்பிரசாந்த்.
தற்போது இவர் பிணையில் வெளிவந்துள்ளார். அவர் சிறையில் இருந்து வந்த பின்னர் தான் பௌத்தத்தை காக்க தனியாக செயற்படப்போவதாக தெரிவித்திருந்தார்.
அதே போல மட்டக்களப்பு சுமனரதன தேரரும் சர்ச்சைக்குரிய நபராக சித்தரிக்கப்பட அவரும் தனித்து இயங்கப்போவதாக தெரிவித்தார். இவர்கள் இருவரும் தெரிவித்தது தனிப்பட்டவர்களின் அரசியல் இலாபங்களுக்காக தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவே.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இரகசிய சந்திப்பு ஒன்றில் நேற்று ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது அரசியல் வாதிகள் அற்ற வகையில் பௌத்தத்தைக் காப்பதற்காக (அபே கம) எமக்கானதிற்காக என்ற புதிய அமைப்பு ஒன்றினை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
இதன் போது கருத்து தெரிவித்த சுமனரதன தேரர்,
வேற்று மதங்கள் இலங்கையில் வளர்ந்து வருவதால் பௌத்தம் அழிக்கப்பட்டு வருகின்றது, அதனால் சிங்கள மக்களை ஒன்று திரட்ட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் புத்த பகவான் 2500 வருடத்திற்கு முன்னர் போதித்த பழமையான பௌத்தம் காணப்படுகின்றது என நாம் மட்டுமே தெரிவித்து கொண்டு இருக்கின்றோம். இப்போது அது அழியும் நிலையை சந்தித்துள்ளது.
ஆனால் வேறு மதங்கள் வளரவும் அதற்கு இடம் கொடுத்து விட்டு நாம் பின்னடைந்து வருகின்றோம் இனியும் இவை நடக்க அனுமதிக்க கூடாது என தெரிவித்தார்.
அதே போல டான் பிரசாந்த் எமக்கான தேவை தற்போது ஒன்றாக இணைவதே அதனை செயப்படுத்த தொடங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அண்மைக்காலமாக இலங்கையில் இனவாதம் பாரிய பிரச்சினையாக உருவெடுத்தது. அதனை அரசு அடக்கி விடவே மீண்டும் அவை தலைதூக்க ஆரம்பித்து வருகின்றதா எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.