முஸ்லிம் மக்களுடன் கோத்தபாய முரண்பட்டது ஏன்? அம்பலமாகும் உண்மைகள்!

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை தோல்வியடைய செய்தது குறித்து குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குள் கோத்தபாய ராஜபக்ச முன்னணி வகிப்பதாக கூறப்படுகின்றது.

பொதுபல சேனாவுடன் இணைந்து முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட மஹிந்த ராஜபக்சவுக்கு முஸ்லிம் மக்களின் ஆதரவு இல்லாமல் செய்ததாக கோத்தபாய மீது குற்றம் சுமத்தப்பட்டது.

எனினும் கோத்தபாய ராஜபக்சவிடம் அவ்வாறான முஸ்லிம் எதிர்ப்பு ஒன்றை காண்பதற்கு இல்லை என தெரியவந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்ச, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் முஸ்லிம் கோடீஸ்வரர்களுக்காக மேற்கொண்ட செயல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

01. கொழும்பு நகரில் அதிக விலையுடனான காணிகளுக்குள் காலி முகத்திடலின் முன்னால் உள்ள இரண்டு ஏக்கர் காணிகளை ஹோட்டல் ஒன்று நிர்மாணிக்க கோத்தபாயவினால் வழங்கப்பட்டுள்ளது. குறித்த ஹோட்டல் குழுவின் உள்ளூர் முகவராக முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் செயற்பட்டுள்ளார்.

இந்த நபர் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி அவர் “சஜாட் மவுஜுன் ராஜபக்ச” என செயற்பட்டவர் தற்போது “சஜாட் மவுஜுன் சமரவீர”வாக மாற்றமடைந்துள்ளார்.

ராஜபக்சர்களின் ஆட்சியின் போது மங்கள சமரவீரவின் தொலைப்பேசி அழைப்பிற்கு பதிலேதும் வழங்காத சஜாட் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி அன்று மங்களவின் பொல்கொட வீட்டில் இருந்துள்ளார்.

02. மற்றுமொரு நிறுவனத்திற்காக கொம்பனி வீதியில் 8 ஏக்கர் அளவு நிலம் கோத்தபாயவினால் வழங்கப்பட்டுள்ளது. கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கே இது வழங்கப்பட்டுள்ளது.

03. ஹோட்டல் ஒன்றுக்காக பம்பலப்பிட்டிய சந்தியில் பெறுமதியான காணி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம் வர்த்தகருக்கே இந்த ஹோட்டல் சொந்தமாகும். தற்போது அங்கு 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் இங்கு மூன்று ஹோட்டல்களை ஒன்றுடன் ஒன்று இணைப்பதற்காக 3 விமான பாலங்கள் நிர்மாணிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (இலங்கையில் பொதுவாக அவ்வாறான பாலம் நிர்மாணிப்பதற்கு அனுமதி இல்லை).

04. கொழும்பு 3 கொள்ளுபிட்டிய காலி, வீதியில் 30 பெர்சஸிற்கும் அதிகமான 3 காணிகள் ஒரு நிறுவனத்தின் முஸ்லிம் வர்த்தகருக்கு வழங்கப்பட்டுள்ளது. இங்கும் ஹோட்டல் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் பல உதாரணங்கள் வழங்கமுடியும் எனினும் அந்த பட்டியல் பெரிதாகிக் கொண்டே செல்லும். “கோத்தபாய முஸ்லிம் விரோதி” என வெளியே காட்டிக் கொண்டு பொதுபல சேனாவுடன் செயற்பட்டுள்ளார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

தற்போது உள்ள பிரச்சினை இவ்வாறு பணத்திற்கு கோடீஸ்வர வர்த்தகர்களுக்கு காணிகளை வழங்கியுள்ள போதிலும் அதன் பணத்தின் 50 சதமேனும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கிடைக்கவில்லை என்பதாகும்.

இதன்மூலம் கிடைத்த பணத்தை கோத்தபாய தனது பாக்கட்டில் போட்டுக்கொண்டதாக கொழும்பு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.