பாகிஸ்தான் நாட்டில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கு உட்பட்ட சித்ரால் மாவட்டத்தில் பனிமலைகள் சூழ்ந்த பகுதி ஆகும். இந்த பகுதியில் அதிக அளவிலான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், திடீரென நேற்றிரவு அங்கு பனிச்சரிவு ஏற்பட்டது.
இந்த பனிச்சரிவால் அங்கு வசித்து வந்த 14 பொதுமக்கள் பரிதாபமாக பலியாகினர். இவர்களில் பெண்கள்,குழந்தைகள்,ஆண்கள் உள்ளிட்டோர் அடங்குவர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றது. அந்த பகுதியில் மேலும் வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா என்பது குறித்து தேடுதல் பணியில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மேலும், பனிச்சரிவு நிகழ வாய்ப்புக்கள் உள்ளதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.