போலீஸ் சீருடையில் கேமரா: அமெரிக்காவில் புது உத்தரவு

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப், பதவி ஏற்றது முதல் பல்வேறு புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக அமெரிக்க பாதுகாப்பு துறை மேம்படுத்தப்படும் என டிரம்ப் அறித்தார். மேலும், உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்து காவல் நிலையங்களும் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கு மாறும்படியும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில்,நியூயார்க் நகரத்தில் உள்ள போலீசார் வரும் 2019-ம் ஆண்டுக்குள்  தங்களது சீருடையுடன் இணைந்த கேமரா பொருத்திக் கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக நியூயார்க் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் இது போன்ற விதிமுறை நடைமுறையில் இருந்தாலும், இப்போது தான் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்  நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
போலீசார் பணியில் இருக்கும் போது சூழ்நிலைக்கு ஏற்ப இந்த கேமராக்களை போலீசார் இயக்க உத்தரவு அளிக்கப்படும் எனவும், இதில் பதிவு செய்யப்படும் காட்சிகளை அவ்வளவு எளிதில் அழிக்க முடியாது எனவும் போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.