இன்றைய ராசி பலன்கள் 06.02.2017

  • மேஷம்

    மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். முகப்பொலிவுக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாம தங்கள் ஏற்படும். ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு டென்ஷன் வந்துப் போகும். எதிர்மறை எண்ணங்கள் வந்து நீங்கும். பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: திட்டமிட்ட காரி யங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் வீண் விவாதம் வந்துப் போகும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

  • கடகம்

    கடகம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோ ரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடி க்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சாதிக்கும் நாள்.

  • கன்னி

    கன்னி: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். நேர்மறை சிந்தனைகள் தோன்றும். பணவரவு திருப்தி தரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மகிழ்ச்சியான நாள்.

  • துலாம்

    துலாம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். போராட்டமான நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட் கள் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபா ரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.

  • தனுசு

    தனுசு: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

  • மகரம்

    மகரம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புதுமை படைக்கும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பழைய கடனை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

  • மீனம்

    மீனம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்